“சால்வை, பூங்கொத்து வழங்குவதை தவிர்க்காவிடில் நிகழ்ச்சிக்கு வர மாட்டேன்” என்று நிகழ்ச்சி மேடையில் அமைச்சர் மா.சுப்பிமணியன் அறிவித்தார்.
சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் தேசிய பிளாஸ்டிக் அறிவை சிகிச்சை தினம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்துகொண்டு இருதவியல் கண்காட்சி மற்றும் புதிதாக சீரமைக்கப்பட்ட கருத்தரங்கை திறந்து வைத்தார்.
இவ்விழாவில் உரையாற்றிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், “அரசு நிகழ்ச்சியில் பங்கேற்க வரும் மக்கள் பிரதிநிதிகளுக்கு சால்வை, பூங்கொத்து வழங்குவதை தவிர்க்க வேண்டும். இல்லையெனில் நிகழ்ச்சிக்கு வரமாட்டேன்.
மக்கள் பிரதிநிதிகளை கௌரவிக்க, அரசு சார்பில் நிதி ஒதுக்கீடு இல்லையென்பதால் சிரமமப்பட்டு வாங்குகின்றனர். இது தகுதியான செயலா என்ற கேள்வி உள்ளது. இது எனது வேலை என்பதால் 36 மருத்துவக் கல்லூரிகளும் இதனை தவிர்க்க வேண்டும்” என்று பேசினார்.
மேலும், மக்கள் பிரதிநிதிகள் பங்கேற்கும் நிகழ்ச்சியில் 36 மருத்துவமனை மருத்துவக் கல்லூரிகளில் பூங்கொத்து வழங்குவது, சால்வை அணிவிப்பதை தவிர்க்க வேண்டும் என கல்லூரி முதல்வர்களுக்கு உத்தரவிட வேண்டும் என்று மேடையிலே மருத்துவ கல்வி இயக்குனருக்கு சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் உத்தரவிட்டார்.