ரயில் நிலையங்களில் டிக்கெட் எடுத்தவர்கள், தாங்கள் ஏறும் ரயில் நிலையத்தை 4 மணி நேரத்திற்கு முன் மாற்றும் வசதியை இந்திய ரயில்வே அறிமுகப்படுத்தியுள்ளது.

3 ஆண்டுகளுக்கு முன் இணையதளம் வாயிலாக டிக்கெட் முன்பதிவு செய்தவர்கள், ரயில் ஏறும் நிலையத்தை மாற்றும் முறை கொண்டுவரப்பட்ட நிலையில், தற்போது அவை விரிவுப்படுத்தப்பட்டுள்ளது.

ஐ.ஆர்.சி.டி இணையதளத்தில் ‘போர்டிங் பாயிண்ட் சேஞ்ச்’ என்ற வசதியை பயன்படுத்தி ரயில் ஏறும் நிலையத்தை எளிதாக மாற்றிக்கொள்ளலாம் என இந்திய ரயில்வே தெரிவித்துள்ளது.