சென்னை: ரேசன் அரிசி கடத்தலை தடுக்க மாநில எல்லைகளில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட உத்தரவிடப்பட்டிருப்பதாக உணவு பாதுகாப்புத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், ரேசன் கடைகளில் பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள விதிமுறைகள் மாற்றப்படும் என கூறினார்.