உள்கட்டமைப்பு, செலவு உள்ளிட்ட காரணங்களால் 100% தாழ்தள பேருந்துகள் இயக்குவது சாத்தியம் இல்லை: ஐகோர்ட்டில் தமிழ்நாடு அரசு தகவல் தெரிவித்துள்ளது. மழை காலங்களில் சாலைகளில் தேங்கும் மழைநீர் பேருந்துக்குள் புகுந்துவிடும் எனவும், ரூ.80 லட்சம் மதிப்புள்ள ஒரு தாழ்தள பேருந்தை ஒரு கி.மீ. தூரம் இயக்க ரூ.41 செலவாகும் எனவும் போக்குவரத்துத் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.