மதுரை எய்ம்ஸுக்கும், தமிழ்நாட்டு திட்டங்களுக்கும் நிதி ஒதுக்கீடு செய்வதில் ஒன்றிய அரசு என்ன மனப்பான்மையுடன் செயல்படுகிறது என்பதற்கு இன்று அவையில் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சொன்ன பதில் சிறந்த எடுத்துக்காட்டு” என்று மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “மதுரை எய்ம்ஸுக்கும், தமிழ்நாட்டு திட்டங்களுக்கும் நிதி ஒதுக்கீடு செய்வதில் ஒன்றிய அரசு என்ன மனப்பான்மையுடன் செயல்படுகிறது என்பதற்கு இன்று அவையில் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சொன்ன பதில் சிறந்த எடுத்துக்காட்டு. எங்களை வஞ்சிக்கும் உங்கள் அரசியலுக்கு தமிழ்நாடு தகுந்த பதில் அளிக்கும்” என்று பதிவிட்டுள்ளார்.

முன்னதாக, மக்களவையில் வெள்ளிக்கிழமை மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை குறித்த காரசாரமான விவாதமும், அதனைத் தொடர்ந்து வெளிநடப்பு காட்சிகளும் அரங்கேறின.

மக்களவையில் கேள்வி நேரத்தின்போது பேசிய திமுக நாடாளுன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு, “எத்தனை மருத்துவக் கல்லூரிகள் முறையான உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாமல் செயல்படுகின்றன? பிரதமர் மோடி அடிக்கல் நாட்டிய எத்தனை மருத்துவக் கல்லூரிகள் இன்னும் தொடங்கப்படாமல் உள்ளன?” என்று கேள்வி எழுப்பினார். அப்போது, “மதுரையில் இன்னும் எய்ம்ஸ் மருத்துவமனை தொடங்கப்படவில்லை” என்று திமுக உறுப்பினர்கள் தெரிவித்தனர்.

இந்தக் குற்றச்சாட்டை மறுத்த மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, “மதுரை எய்ம்ஸில் மருத்துவப் படிப்புகள் நடைபெற்று வருகின்றன. அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளை உருவாக்க ரூ.1,900 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. மதுரை எய்ம்ஸ் மருத்துவனை தொடர்பாக எதிர்க்கட்சிகள் பிழையான தகவல்களைக் கூறி அவையைத் தவறாக வழிநடத்துகின்றன