பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸின் மகள் சங்கமித்ராவுக்கு இன்று திருமணம் நடைபெற்றது.

பாமக நிறுவனர் ராமதாஸ் – சரஸ்வதி அம்மையார் ஆகியோரின் பெயர்த்தியும், முன்னாள் மத்திய சுகாதார அமைச்சர், தற்போதைய நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் அன்புமணி ராமதாஸ் – சௌமியா அன்புமணி ஆகியோரின் மகளுமான சங்கமித்ரா சௌமியா அன்புமணி – சென்னை சோழிங்கநல்லூர் பூ. தனசேகரன் – கலைவாணி தனசேகரன் ஆகியோரின் மகன் த. ஷங்கர் பாலாஜி இணையரின் திருமணத்தை ராமதாஸ் சென்னையில் இன்று நடத்தி வைத்தார்.

தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் மு.கிருஷ்ணசாமி, பாமக தலைவர் ஜி.கே.மணி, முன்னாள் மத்திய ரயில்வே அமைச்சர் ஏ.கே.மூர்த்தி மற்றும் மணமகள் – மணமகன் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் உள்ளிட்டோர் இத்திருமண நிகழ்வில் கலந்து கொண்டனர்.