தொண்டர்களின் துணையுடன் தமிழக மக்களின் பேராதரவோடு தமிழகத்தில் மீண்டும் அதிமுக ஆட்சியைக் கொண்டுவருவோம் என்று வி.கே.சசிகலா தெரிவித்துள்ளார்.

முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் 105-வது பிறந்த நாளையொட்டி, சென்னை தியாராய நகரில் உள்ள எம்ஜிஆர் நினைவு இல்லத்தில் உள்ள சிலைக்கு சசிகலா மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். எம்ஜிஆரின் உருவப் படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்திய அவர், நினைவு இல்லத்தைச் சுற்றிப் பார்த்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சசிகலா, “இந்த நன்னாளில் ஒற்றுமையாக இருந்து, எம்ஜிஆரின் ஆட்சியை மீண்டும் கொண்டுவருவோம் என்பதை நான் தெரிவித்துக் கொள்கிறேன். தொண்டர்களின் துணையோடும், தமிழக மக்களின் பேராதரவோடும், தமிழகத்தில் மீண்டும் எம்ஜிஆரின் ஆட்சியைக் கொண்டுவருவோம்” எனத் தெரிவித்தார்.