பெட்ரோல், டீசல் விலை கடந்த 8 நாட்களில் 7வது முறையாக அதிகரித்துள்ளது. தலைநகர் டெல்லியில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.100ஐ கடந்துள்ளது. சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.105.94க்கும், டீசல் லிட்டருக்கு ரூ.96க்கும் விற்கப்படுகிறது.
கடந்த ஆண்டு செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்தது. இதையடுத்து, மத்திய அரசு வரி குறைப்பு செய்து பெட்ரோல் லிட்டர் ஒன்றுக்கு ரூ.5-ம், டீசல் விலை லிட்டர் ஒன்றுக்கு ரூ.10-ம் குறைத்தது. கடந்தாண்டு நவ.4-ம் தேதிக்குப் பிறகு மேற்கொள்ளப்பட்ட இந்த விலைக் குறைப்புக்குப் பிறகு, 137 நாட்களாக விலை உயர்த்தப்படவில்லை.
இந்நிலையில் மார்ச் 22 ஆம் தேதி பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டது. அதிலிருந்து 8 நாட்களில் 7வது முறையாக இன்றும் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளது.
நகரங்கள் | பெட்ரோல் விலை | டீசல் விலை |
டெல்லி | ரூ.100.21 | ரூ.94.41 |
மும்பை | ரூ.115.04 | ரூ.99.25 |
கொல்கத்தா | ரூ.109.68 | ரூ.94.62 |
சென்னை | ரூ.105.94 | ரூ.96 |
உங்கள் நகரங்களில் பெட்ரோல், டீசல் இன்றைய நிலவரத்தை அறிய 9224992249.என்று எண்ணுக்கு எஸ்எம்எஸ் அனுப்பித் தெரிந்து கொள்ளலாம்.
நகரம் | எஸ்எம்எஸ் தகவல் |
---|---|
Agartala | RSP 159850 |
Aizwal | RSP 160181 |
Ambala | RSP 102049 |
Bangalore | RSP 118219 |
Bhopal | RSP 169398 |
Bhubhaneswar | RSP 124305 |
Chandigarh | RSP 102790 |
Chennai | RSP 133593 |
Daman | RSP 177747 |
Dehradun | RSP 161143 |
Faridabad | RSP 102287 |
Gandhinagar | RSP 218671 |
Gangtok | RSP 159289 |
Ghaziabad | RSP 154410 |
Gurgaon | RSP 102082 |
Guwahati | RSP 159571 |
Hyderabad | RSP 134483 |
Imphal | RSP 159875 |
Itanagar | RSP 160647 |
Jaipur | RSP 123143 |
Jammu | RSP 108726 |
Jullunder | RSP 108743 |
Kohima | RSP 160154 |
Kolkata | RSP 119941 |
Lucknow | RSP 155054 |
Mumbai | RSP 108412 |
New Delhi | RSP 102072 |
Noida | RSP 155444 |
Panjim | RSP 125676 |
Patna | RSP 166873 |
Pondicherry | RSP 135299 |
Port Blair | RSP 220191 |
Raipur | RSP 169751 |
Ranchi | RSP 166751 |
Shillong | RSP 159828 |
Shimla | RSP 109295 |
Silvasa | RSP 112114 |
Srinagar | RSP 109536 |
Trivandrum | RSP 124923 |
Vijayawada | RSP 127611 |
Visakhapatnam | RSP 127290 |
உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருகிறது. எரிபொருள் தேவையில் 85% இறக்குமதியையே நம்பியிருக்கும் நமது தேசத்தில், இந்த விலையுயர்வின் தாக்கம் எதிரொலிக்கத் தொடங்கியுள்ளது.
ரஷ்யாவிடமிருந்து மலிவு விலை கச்சா எண்ணெய்யை மத்திய அரசு இறக்குமதி செய்து வருகிறது. இருப்பினும் இன்னொரு புறம் விலையேற்றம் நிகழ்ந்து கொண்டே இருக்கிறது.