மைக்ரோசாஃப்ட் தலைவரும், தலைமைச் செயல் அதிகாரியுமான சத்யா நாதெள்ளாவை சந்தித்த பிரதமர் நரேந்திர மோடி, தொழில்நுட்பம் மற்றும் புதுமைக் கண்டுபிடிப்புகளில் இந்தியாவின் முன்னேற்றங்கள் தொழில்நுட்பம் தலைமையிலான வளர்ச்சியில் சகாப்தத்தை ஏற்படுத்துகிறது என்றார்.

இது குறித்து பிரதமர் விடுத்துள்ள ட்விட்டர் பதிவில், “உங்களை சந்தித்தது மகிழ்ச்சி. தொழில்நுட்பம் மற்றும் புதுமைக் கண்டுபிடிப்புகளில் இந்தியாவின் முன்னேற்றங்கள் தொழில்நுட்பம் தலைமையிலான வளர்ச்சியில் சகாப்தத்தை ஏற்படுத்துகிறது. புவியியல் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான திறனுடனான சிந்தனைகள் நமது இளைஞர்களிடம் உள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார்.