தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்கக் கோரி ஆட்சியர் அலுவலகத்தில் முற்றுகையிட முயன்ற 43பேரை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடியில் பிரிவினைவாதிகளின் சதித்திட்டம் காரணமாக மூடப்பட்ட ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்கக்கோரியும், வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களின் சார்பாக இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் தலைமையில் சுமார் 100க்கும் மேற்பட்டோர் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுகத்தில் முற்றுகையிட்டு மனு அளிக்க வந்தனர். இதையடுத்து சிப்காட் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சண்முகம் தலைமையிலான போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.
பின்னர் இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் தலைமையில், மாநில துணைத் தலைவர் வசந்தகுமார், வழக்கறிஞர்கள் மணிகண்ட ராஜா, ஜெயம் பெருமாள், ஆகியோர் மனு அளிக்க அனுமதிக்கப்பட்டனர். இதனிடையே ஆட்சியர் அலுவலகத்துக்குள் அத்திமீறி நுழைய முயன்றதாக 39 பெண்கள் உட்பட 43 பேரை சிப்காட் காவல் நிலைய போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்கள் அனைவரும் மடத்தூரில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர்.