தனித் தேர்வர்களுக்கான 10, 11-ம்வகுப்பு துணைத் தேர்வு அட்டவணையை தேர்வுத் துறை வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து தேர்வுத் துறை இயக்குநர் சி.உஷாராணி வெளியிட்ட செய்திக்குறிப்பு:

10-ம் வகுப்பு துணைத் தேர்வுசெப்டம்பர் 16 முதல் 28-ம் தேதிவரையும், 11-ம் வகுப்பு துணைத்தேர்வு செப்டம்பர் 15 முதல் 30-ம் தேதி வரையும் நடைபெற உள்ளது.

தேர்வு எழுத விரும்பும் தனித் தேர்வர்கள் ஆகஸ்ட் 7-ம் தேதி (இன்று) முதல் ஆகஸ்ட் 11-ம்தேதி வரை கல்வி மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ள அரசு சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம்.

இதற்கான தேர்வுக் கட்டணம், விரிவான தேர்வு கால அட்டவணை, தத்கால் விண்ணப்ப முறைஉள்ளிட்ட கூடுதல் விவரங்களை http://www.dge.tn.gov.in என்ற தேர்வுத் துறையின் இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.