கொல்கத்தா: ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரின் பிளே ஆஃப் சுற்றின் முதல் தகுதி சுற்று ஆட்டத்தில் குஜராத் – ராஜஸ்தான் அணிகள் இன்று இரவு 7.30 மணிக்கு கொல்கத்தாவில் மோதுகின்றன. அறிமுக அணியான குஜராத் லீக் சுற்றில் 20 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்திருந்தது.
முதல் முறையாக கேப்டனாக ஹர்திக் பாண்டியா, மட்டை வீச்சு, பந்து வீச்சு என இரண்டிலும் சிறந்த பங்களிப்பை வழங்கி அணியை அற்புதமாக வழிநடத்தி வருகிறார். சுழலால் எதிரணிக்கு நெருக்கடி கொடுக்கும் ரஷித் கான் பேட்டிங் கிலும் வலுசேர்ப்பவராக உருமாற் றம் கண்டுள்ளார். டேவிட் மில்லர், ராகுல் டிவாட்டியா ஆகியோரது அதிரடியும் பலம் சேர்ப்பதாக உள்ளது. எனினும் டாப் ஆர்டரில் ஷுப்மன் கில்லின் பார்ம் சற்று கவலை அளிப்பதாக உள்ளது. அதேவேளையில் ரித்திமான் சாஹா, கடந்த சில ஆட்டங்களில் நம்பிக்கை அளிக்கும் விதமாக செயல்பட்டு வருகிறார்.
வேகப்பந்து வீச்சில் பவர் பிளேவில் இந்த சீசனில் அதிக 11 விக்கெட்கள் வீழ்த்தியுள்ள மொகமது ஷமியுடன் அல்ஸாரி ஜோசப், லாக்கி பெர்குசன் கூட்டணி எதிரணி பேட்ஸ்மேன்களுக்கு அழுத்தம் கொடுக்க ஆயத்தமாக உள்ளனர். சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் அணி 18 புள்ளிகளுடன் லீக் சுற்றில் 2-வது இடம் பிடித்திருந்தது. பந்து வீச்சை பொறுத்தவரையில் ராஜஸ்தான் அணி சுழலில் பலமாக உள்ளது. யுவேந்திர சாஹல் விக்கெட் வீழ்த்திவதும், ரவிச்சந்திரன் அஸ்வின் ரன் குவிப்பை கட்டுப்படுத்துவதிலும் முனைப்புடன் செயல்படுகின்றனர்.
வெற்றியை தீர்மானிக்கும் சூப்பர் ஓவர் ஐபிஎல் தொடரின் பிளே ஆஃப் சுற்றின் தகுதி சுற்று 1 மற்றும் எலிமினேட்டர் ஆட்டங்கள் கொல்கத்தாவில் இன்றும் நாளையும் நடைபெறுகிறது. இந்த இரு ஆட்டங்களும் மழையால் பாதிக்கப்பட வாய்ப்புகள் உள்ளன. இந்நிலையில் இந்த நிலையில் பிளே ஆஃப் சுற்று ஆட்டங்கள் மழையால் பாதிக்கப்பட்டால் கடைபிடிக்கப்படும் விதிமுறைகளை ஐபிஎல் நிர்வாகம் அறிவித்துள்ளது. இதன் படி தகுதி சுற்று 1, எலிமினேட்டர், தகுதி சுற்று 2, இறுதிப் போட்டி ஆகிய ஆட்டங்கள் ஒரு ஓவர் கூட வீசப்படாமல் கைவிடப்பட்டால் லீக் சுற்றில் எந்த அணி முன்னிலை வகித்திருந்தது என்பதை கணக்கிட்டு வெற்றியாளர் தீர்மானிக்கப்படுவார்.
இறுதிப் போட்டி 29-ம் தேதி நடைபெறுகிறது. இந்த ஆட்டம் அன்றைய தினம் மழையால் பாதிக்கப்பட்டால் அடுத்த நாள் (30-ம் தேதி) நடத்தப்படும். இறுதிப் போட்டியும் அதற்கு முன்னதாக நடைபெறும் தகுதி சுற்று 2 ஆட்டமும் அகமதாபாத்தில் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. எலிமினேட்டர், இரு தகுதி சுற்று ஆட்டங்கள் மழையால் பாதிக்கப்பட்டால் தேவைப்படும் பட்சத்தில் ஆட்டத்தை 5 ஓவர்களாக குறைத்து நடத்தலாம். 5 ஓவர் போட்டியை முடிக்க திட்டமிட முடியாத பட்சத்தில், நிபந்தனைகள் அனுமதித்தால், வெற்றியாளரை தீர்மானிப்பதற்காக சூப்பர் ஓவர் கடைபிடிக்கப்படும். சூப்பர் ஓவரும் நடத்த முடியாத சூழ்நிலை நிலவினால் லீக் சுற்றில் எந்த அணி முன்னிலை வகித்ததோ அந்த அணி வெற்றியாளராக கருதப்படுவார்.
இரண்டு தகுதி சுற்று ஆட்டம், எலிமினேட்டரில் ஒரு இன்னிங்ஸ் முடிந்தாலும், இரண்டாவது இன்னிங்ஸில் விளையாட முடியாவிட்டால், டக்வொர்த் லீவிஸ் முறை செயல்பாட்டுக்கு வரும்.இந்த சீசனில் 3 சதம், 3 அரை சதங்கள் விளாசிய ஜாஸ் பட்லர் கடந்த 5 ஆட்டங்களில் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்த வில்லை. அதிலும் 3 ஆட்டங்களில் ஒற்றை இலக்க ரன்னில் வெளியேறியிருந்தார். இதேபோன்று சஞ்சு சாம்சன், ஷிம்ரன் ஹெட்மயர் ஆகி
யோரிடம் இருந்து பெரிய இன் னிங்ஸ் வெளிப்பட வில்லை. பிளே ஆஃப் சுற்று என்பதால் இவர்கள் பொறுப்புடன் செயல்படக்கூடும்.