கடலூர் மாவட்டத்தில் பொது இடங்களில் புத்தாண்டு கொண்டாட தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். சக்திகணேசன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

ஒமைக்ரான் தொற்று பரவல் காரணமாக தமிழக அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகளை மக்கள் அனைவரும் கட்டாயம் பின்பற்ற வேண்டும்.

பொது இடங்களில் புத்தாண்டு கொண்டாட்டத்தை தவிர்க்குமாறு பெற்றோர் தங்கள் குடும்ப இளைஞர்களிடம் அறிவுறுத்த வேண்டும்.

2022-ம் ஆண்டு புத்தாண்டை முன்னிட்டு கடலூர் மாவட்ட சுற்றுலா தலங்களான தேவனாம்பட்டினம் சில்வர் பீச், பிச்சாவரம் சுற்றுலா மையம், பூங்காக்கள் மற்றும் பொது இடங்களில் புத்தாண்டு கொண்டாட தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் இளைஞர்கள் மது அருந்திவிட்டு, இருசக்கர வாகனங்களில் சாலைகளில் விபத்தை ஏற்படுத்தும் வகையில் அதிவேகமாக சென்றால் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து, வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும்.

புத்தாண்டை பாதுகாப் பானதாக, மகிழ்ச்சியுடன் கொண்டாட கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் கேட்டுக் கொள்ளப்படுகிறது.