ஐஏஎஸ் அதிகாரிகளை ஒன்றிய அரசுப்பணிக்கு பணி நிரவல் செய்வது தொடர்பாக புதிய சட்டதிருத்தத்தைக் கொண்டுவருவதற்கான முன்மொழிவை ஒன்றிய அரசு வெளியிட்டுள்ளது. சிவில் சர்வீஸ் தேர்வு மூலமாக தேர்வு செய்யப்படும் ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎப்எஸ் அதிகாரிகள் மதிப்பெண் அடிப்படையில் சொந்த மாநிலத்திலோ, பிற மாநிலங்களிலோ பணியமர்த்தப்படுவார்கள். ஒன்றிய அரசின் மூலமாக அதிகாரிகள் நியமிக்கப்பட்டாலும் அவர்கள் நியமிக்கப்படும் மாநில அரசின் முடிவின் படியே பணியிடங்கள் இறுதி செய்யப்படுகின்றன. அதே நேரம் மத்திய அரசு துறைகளில் பணியாற்ற குறிப்பிட்ட எண்ணிக்கையிலான அதிகாரிகளை ஒவ்வொரு மாநிலமும் அனுப்ப வேண்டும் என்ற விதி உள்ளது. இந்நிலையில் அது சார்ந்த விதி எண் 6-ன் கீழ் சில திருத்தங்களை ஒன்றிய அரசு முன்மொழிந்துள்ளது.அதன்படி,

*குறிப்பிட்ட நேரத்திற்குள் ஒன்றிய அரசு கோரும் அதிகாரியை மாநில அரசு விடுவிக்காவிட்டால் மாநில அரசின் ஒப்புதல் இன்றியே பணியிலிருந்து அதிகாரிகள் விடுபடலாம். தற்போதைய விதிப்படி குறிப்பிட்ட அதிகாரியை விடுவிக்க மாநில அரசின் ஒப்புதல் அவசியம்; அவர்கள் ஒப்புதல் அளிக்க எந்த கால அளவும் இல்லை.