ஆவணங்கள் இன்றி சரக்கு ரயிலில் கொண்டு செல்லத் திட்டமிட்ட 7 டன் தாமிரம், இருப்பு துகள்களை வணிகவரித் துறையினர் பறிமுதல் செய்தனர்.
மதுரையிலிருந்து சரக்கு ரயிலில் ஆவணம் இன்றி காப்பர் மற்றும் இரும்பு ஸ்கிராப் கடத்தப்படுவதாக மதுரை வணிகவரித் துறை கோட்ட அமலாக்கப் பிரிவு அலுவலகத்துக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து அமலாக்கப் பிரிவு இணை ஆணையர் இந்திரா தலைமையில் வணிக வரித்துறை யினர் மதுரை ரயில்நிலைய சரக்குப் பிரிவில் சோதனை மேற்கொண் டனர்.
அப்போது மதுரையைச் சேர்ந்த மூன்று நிறுவனங்கள் எவ்வித ஆவணமும் இன்றி டெல்லி செல்லும் நிஜாமுதீன் எக்ஸ்பிரஸ் ரயிலில் காப்பர் மற்றும் இரும்புத் துகள்களை கடத்த திட்டமிட்டது தெரிந்தது. 7 டன் எடையுள்ள இப்பொருட்களின் மதிப்பு ரூ.23 லட்சம். பொருட்களை பறிமுதல் செய்ததுடன், ஆணங்கள் இல்லாததால் 200 சதவீத உத்தேச தண்டத் தொகையாக ரூ.9 லட்சம் வசூலிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.