மும்பை பங்குச்சந்தையில் இன்றைய வர்த்தகம் சரிவுடன் தொடங்கியது. வர்த்தக நேர தொடக்கத்தில் சென்செக்ஸ் 100 புள்ளிகள் வீழ்ச்சியடைந்து 61,858 ஆக இருந்தது. அதேநேரத்தில், தேசியப் பங்குச்சந்தையில் நிஃப்டி 40 புள்ளிகள் சரிந்து 18,400 ஆக இருந்தது.
பங்குச்சந்தையில் வியாழக்கிழமை வர்த்தகம் வீழ்ச்சியுடன் தொடங்கியது. காலை 09:45 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 78.61 புள்ளிகள் சரிந்து 61,902.11 ஆக இருந்தது. தேசிய பங்குச்சந்தையில் 29.35 புள்ளிகள் சரிந்து 18,380.30 ஆக இருந்தது.
உலகளாவிய சந்தையின் மந்தமான போக்கு காரணமாக இந்திய பங்குச்சந்தைகளின் வர்த்தகம் வீழ்ச்சியுடனேயே விற்பனையைத் தொடங்கின.
தனிப்பட்ட பங்குகளைப் பொறுத்த வரை எல் அண்ட் டி, ஆக்சிஸ் பேங்க், ஐசிஐசிஐ பேங்க், பவர் கிரீட் கார்ப்பரேசன், ஹிந்துஸ்தான் லீவர், சன் பார்மா இன்டஸ்ட்ரீஸ், ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ், பஜாஜ் பைனான்ஸ் ஆகிய பங்குகள் ஏற்றத்தில் இருந்தன. இன்ஃபோசிஸ், ஏசியன் பெயின்ட்ஸ், ஹெச்டிஎஃப்சி, ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, ஹெச்டிஎஃப்சி பேங்க், ஐடிசி, நெஸ்ட்லே இந்தியா, டாக்டர் ரெட்டிஸ் லேப், விப்ரோ, டிசிஎஸ் போன்ற பங்குகள் வீழ்ச்சி கண்டிருந்தன