மும்பை பங்குச்சந்தையில் இன்று வார இறுதி நாள் வர்த்தகத்தில் சென்செக்ஸ் 984 புள்ளிகள் (1.61 சதவீதம்) உயர்ந்து 61,598 ஆக இருந்தது. அதேநேரத்தில், தேசியப் பங்குச்சந்தையில் நிஃப்டி 274 புள்ளிகள் (1.52 சதவீதம்) உயர்ந்து 18,302 ஆக இருந்தது.
பங்குச்சந்தையில் இன்று வர்த்தகம் ஏற்றத்துடனேயே தொடங்கியது. காலை 09:35 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 992.25 புள்ளிகள் ஏற்றத்துடன் 61,605.95 ஆக இருந்தது. தேசிய பங்குச்சந்தையில் 242.00 புள்ளிகள் உயர்வுடன் 18,270.20 ஆக இருந்தது.
உலகளாவிய சந்தையின் சாதகமான போக்கு, அமெரிக்க பெடரல் வங்கியின் வட்டி விகித உயர்வின் மென்மையான போக்கு காரணமாக, அனைத்து வகை பங்குகளும் லாபத்துடனேயே விற்பனையைத் தொடங்கின. சந்தையில் நேர்மறை போக்கே நிலவியது.
தனிப்பட்ட பங்குகளைப் பொறுத்த வரை ஜோமாட்டோ பங்குகள் 10 சவீதமும், அப்பல்லோ ஹாஸ்பிடல் மருத்துவமனை பங்குகள் 2 சதவீதம் உயர்ந்திருந்தன. மற்ற அனைத்து பங்குகளும் உயர்ந்திருந்தன.