விஜய் நடித்து வரும் ‘பீஸ்ட்’ படத்தில் சிவகார்த்திகேயன் ஒரு பாடலை எழுதியுள்ளார்.
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய், பூஜா ஹெக்டே, செல்வராகவன், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘பீஸ்ட்’. சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்தப் படத்தைப் பெரும் பொருட்செலவில் தயாரித்து வருகிறது. அனிருத் இசையமைப்பாளராகப் பணிபுரிந்து வருகிறார்.
தற்போது இந்தப் படத்தில் ஒரு பாடலை எழுதியுள்ளார் சிவகார்த்திகேயன். நெல்சன் – அனிருத் இருவருக்குமே நெருங்கிய நண்பராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். ஆகையால் ‘பீஸ்ட்’ படத்தில் ஒரு பாடலை எழுதியுள்ளார்.
முன்னதாக, நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘டாக்டர்’ படத்தைத் தயாரித்து நாயகனாகவும் நடித்துள்ளார் சிவகார்த்திகேயன். இதற்கும் அனிருத்தான் இசையமைப்பாளராகப் பணிபுரிந்துள்ளார். இதன் பாடல்கள் உருவாக்கம் மற்றும் பாடல்கள் ஆகியவற்றுக்கு இணையத்தில் நல்ல வரவேற்பு கிடைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.