மேகேதாட்டுவில் கர்நாடக அரசு அணை கட்டுவதை தடுக்க சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றுவது குறித்து பரிசீலித்து முடிவெடுக்கப்படும் என்று தமிழக நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை:
கர்நாடக பட்ஜெட்டில் மேகேதாட்டு திட்டத்துக்கு ரூ.1000 கோடிநிதி ஒதுக்கியிருப்பது இந்திய இறையாண்மை, கூட்டாட்சி தத்துவத்துக்கு முரணானது. இத்திட்டத்தை தடுப்பதற்கான அனைத்து சட்ட நடவடிக்கைகளையும் தமிழக அரசு மேற்கொள்ளும்.
இதுகுறித்து விவாதிக்க அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டுமாறு அரசியல் கட்சிகள் கோருவதுநியாயமானதுதான். கர்நாடக அரசுகேகேதாட்டுவில் அணை கட்ட முயற்சிப்பதை தடுக்க பேரவையில் தீர்மானம் நிறைவேற்றுவது குறித்துநிலைமைக்கேற்ப பரிசீலித்து முடிவெடுக்கப்படும்.