முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் அழைப்பை ஏற்று தமிழ்நாடு வருகிறார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தமிழ்நாடு சட்டப்பேரவையின் நூற்றாண்டு விழா நாளை கொண்டாடப்படுகிறது. இந்த விழாவில் பங்கேற்க குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தமிழ்நாடு வருகிறார். முதலமைச்சரான பின்னர் முதன் முறையாக குடியரசுத் தலைவரை சந்தித்த மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு சட்டப்பேரவையின் நூற்றாண்டு விழாவில் பங்கேற்க அழைப்பு விடுத்திருந்தார். அவரது அழைப்பை ஏற்று விழாவில் பங்கேற்க குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்திருந்தார்.
இதனையடுத்து நாளை தமிழ்நாடு வரும் குடியரசுத் தலைவர், முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் உருவப்படம் திறப்பு நிகழ்விலும், மதுரை கருணாநிதி நூலகத்திற்கு அடிக்கல் நாட்டு விழா மற்றும் கிண்டியில் அமையவுள்ள மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டு விழாவிலும் பங்கேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.