12 ஆண்டுகளுக்குப் பிறகு விஜய்யுடன் மீண்டும் இணைந்து நடிக்கவுள்ளார் பிரகாஷ்ராஜ்.

விஜய் நடிப்பில் வெளியான ‘கில்லி’, ‘சிவகாசி’, ‘போக்கிரி’, ‘வில்லு’ உள்ளிட்ட படங்களில் வில்லன் கதாபாத்திரத்தில் பிரகாஷ்ராஜ் நடித்தார். 2009-ம் ஆண்டு வெளியான ‘வில்லு’ படத்துக்குப் பிறகு விஜய் – பிரகாஷ்ராஜ் இருவருமே இணைந்து நடிக்கவில்லை.

தற்போது மீண்டும் விஜய் – பிரகாஷ்ராஜ் இணைந்து நடிக்கவுள்ளனர். வம்சி இயக்கத்தில் விஜய் நடிக்கவுள்ள படம் ‘தளபதி 66’. தில் ராஜு தயாரிக்கவுள்ள இந்தப் படத்தில் வில்லன் கதாபாத்திரம் அல்லாமல், மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார் பிரகாஷ்ராஜ்.

‘தளபதி 66’ படத்தின் முதற்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. விரைவில் படத்தின் பூஜை மட்டும் நடைபெறவுள்ளது. அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்திலிருந்து படப்பிடிப்பு நடத்தப் படக்குழு முடிவு செய்துள்ளது.