வேலை வாய்ப்பின்மை பிரச்சினை யில் நாட்டிலேயே புதுச்சேரி முதலிடத்தில் உள்ளது. கடந்த 10 ஆண்டு களாக வேலை வழங்காததால் இளையோர்கள் தவித்து வரு கின்றனர்.

புதுச்சேரியை பொறுத்தவரை முக்கியமான 38 அரசுத் துறைகள் உள்ளன. இத்துறைகளுக்கான உயர் பதவிகள் போக மீதியுள்ள இடங்கள் மத்திய அரசின் அனுமதி பெற்று, நிர்வாக சீர்த்திருத்தத்துறை மூலம் நிரப்பப்படுன்றன. மொத்தம் 37,929 இடங்களில் கிட்டத்தட்ட 10 ஆயிரம் பணியிடங்கள் நிரப்பப்படாமல் காலியாகவே உள் ளன. புதுச்சேரிக்கு தனியாக பணியாளர் தேர்வாணைம் இல்லை. குரூப்-ஏ உள்ளிட்ட உயர் பதவிக்கான பணியிடங்கள் மத்திய பணியாளர் தேர்வாணையம் மூலம் நிரப்பப்படுகின்றன.

புதுச்சேரியில் மருத்துவம், பொறியியல், பல் மருத்துவம், கால்நடை மருத்துவம், நர்சிங், பாரா மெடிக்கல், விவசாயம், சட்டம், பி.எட்., கேட்ரிங், கலை மற்றும் அறிவியல் என மொத்தம் 145 கல்லூரிகள் உள்ளன. இக்கல்லூரிகளில் 1.5 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான மாணவர்கள் படித்து முடிக்கின் றனர். அவர்களுக்கு அரசுப் பணி கிடைப்பதில் பல சிக்கல்கள் உள்ளன.

இதுதொடர்பாக வேலைக்காக காத்திருப்போரின் பெற்றோர் கூறுகையில், “காவலர் தேர்வு கடந்த ஆட்சியில் நடந்த திட்டமிடப்பட்டு ஆளுநர் தலையீட்டால் இதுவரை நடத்தப்படவில்லை. பலரும் இன்னும் நம்பிக்கையுடன் உடல்தகுதித் தேர்வுக்காக பயிற்சி யில் உள்ளனர். பல தனியார் தொழிற்சாலைகளும் மூடப்பட்டுள் ளன. புதிய தொழிற்சாலைகளும் வரவில்லை. பஞ்சாலைகள் இல்லை. அரசு சார்பு நிறுவனங் களையும் மூடிவிட்டனர். புதிய அரசு இவ்விஷயத்தில் உரிய கவனம் செலுத்த வேண்டும்” என்று குற்றம் சாட்டுகின்றனர்.

அரசு வட்டாரங்களில் விசாரித்த போது, “உயர்கல்வித்துறை, பள் ளிக் கல்வித்துறையில் 2 ஆயிரம் பணியிடங்கள் வரையிலும், பொதுப்பணித்துறையில் 1,100 பணியிடங்களும், சுகாதாரத் துறையில் 600 என பல்வேறு துறைகளில் கடந்த 10 ஆண்டுகளாக பல துறைகளில் பணியிடங்கள் காலியாக உள்ளன. புதுச்சேரியில் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் மட்டும் 2 லட்சத்து 10 ஆயிரம் பேர் பணிக்காக பதிவு செய்து காத்துள்ளனர். மாநிலத்தில் கடும் நிதி பிரச்சினை உள்ளது. கடந்த 10 ஆண்டுகளாக வேலைக்காக இங்கிருந்து அழைப்பு ஏதும் அனுப்பப்படவில்லை” என்று குறிப்பிட்டனர்.

நாட்டிலேயே முதலிடம்

சமூக ஆர்வலர்கள் தரப்பில் கூறுகையில், “வேலை வாய்ப் பின்மை தொடர்பான ஆய்வு முடிவில் 75.8 சதவீதத்துடன் நாட்டி லேயே புதுச்சேரி முதலிடத்தில் உள்ளது. பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றோர் பங்கேற்கலாம் என தெரிவிக்கப்பட்ட அங்கன்வாடி பணிக்கு பல பட்டமேற்படிப்பு பட்டதாரிகள் விண்ணப்பித்ததே இதற்கு சான்று. சட்டம் ஒழுங்கை கட்டுக்குள் வைக்க, புதிய தொழிற்சாலைகளை கொண்டு வருதல், வேலை வாய்ப்புகளை ஏற்படுத்துதல் அவசியம். புதுச் சேரிக்கு தனி பணியாளர் தேர்வா ணையம் அவசியம் தேவை” என்ற னர்.

வேலைவாய்ப்பின்மை பற்றிமுதல்வர் ரங்கசாமியிடம் கேட்ட தற்கு, “ஏஎப்டி தொழிற்சாலையை தனியார் பங்களிப்புடன் திறக்க திட்டமிட்டுள்ளோம். அரசுத் துறைகளில் 10 ஆயிரம் காலிப் பணியிடங்களை நிரப்பும் பணியை துரிதப்படுத்தி உள்ளேன். விரைவில் நிரப்புவோம்” என்று உறுதியளிக்கிறார்.