காவலர் வீர வணக்க நாளை முன்னிட்டு, காவல் பணியில் தங்களை ஈடுபடுத்திக்கொண்ட அத்தனைக் காவலர்களுக்கும் வீரவணக்கம் என, முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
நாட்டைப் பாதுகாப்பதற்காக, வீரதீரச் செயல்களில் ஈடுபட்டு உயிர்த் தியாகம் செய்த காவலர்களின் நினைவைப் போற்றும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 21-ம் தேதி காவலர் வீரவணக்க நாள் கடைப்பிடிக்கப்படுகிறது.
இந்நிலையில், இன்று (அக். 21) காவலர் வீர வணக்க நாள் கடைபிடிக்கப்படுவதை முன்னிட்டு, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தன் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது:
“சமூகத்தில் சட்டம் ஒழுங்கைப் பேணிப் பாதுகாக்க உணவு – உறக்கம் – இன்ப துன்பங்களை மறந்து காவல் பணியில் தங்களை ஈடுபடுத்திக்கொண்ட அத்தனைக் காவலர்களுக்கும் police commemoration Day-வில் வீரவணக்கம்!”.
இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.