வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் மே தினத்தையொட்டி (1-ம் தேதி) டாஸ்மாக் மதுபானக் கடைகள், பார்களுக்கு விடுமுறை என மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் (வேலூர்), பாஸ்கர பாண்டியன் (ராணிப்பேட்டை) ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து, அவர்கள் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘‘மே தினத்தையொட்டி மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுபானக் கடைகள், அதையொட்டிய பார்கள் மற்றும் நட்சத்திர அந்தஸ்துள்ள ஓட்டல்களில் உள்ள பார்களை மூடி வைக்க வேண்டும். விதிகளை மீறி மதுபான விற்பனை செய்யப்பட்டால் உரிய குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், பார்களின் உரிமம் ரத்து செய்தல் போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்படும்’’ என தெரிவித்துள்ளனர்.