லண்டன்: உலகின் அதிகாரமிக்க பாஸ்போர்ட்டுகளின் பட்டியலை லண்டனை சேர்ந்த ஹென்லி அமைப்பு வெளியிட்டுள்ளது.
எந்த நாட்டின் பாஸ்போர்ட்டைக் கொண்டு அதிக எண்ணிக்கையிலான வெளிநாடுகளுக்கு விசா இல்லாமல் மற்றும் சென்றடைந்தவுடன் விசா பெறலாம் என்பதன் அடிப்படையில் இந்தப் பட்டியல் உள்ளது.
சிங்கப்பூருக்கு முதலிடம்
அதன்படி சிங்கப்பூர் பாஸ்போர்ட்டைக் கொண்டு 192 நாடுகளுக்கு விசா இல்லாமல் செல்ல முடியும். இந்த பட்டியலில் கடந்த 5 ஆண்டுகளாக ஜப்பான் முதல் இடம் வகித்து வந்தது. தற்போது ஐப்பானை பின்னுக்குத் தள்ளி சிங்கப்பூர் முதல் இடம் பிடித்துள்ளது. ஐப்பான் மூன்றாம் இடத்துக்கு நகர்ந்துள்ளது.
2-ம் இடத்தில் ஜெர்மனி, இத்தாலி, ஸ்பெயின் நாடுகள் உள்ளன. பிரிட்டன் 4-ம் இடத்திலும் அமெரிக்கா 8-ம் இடத்திலும் உள்ளன. இந்தியா 80-வது இடத்தில் உள்ளது. இந்திய பாஸ்போர்ட் மூலம் 57 நாடுகளுக்கு விசா இல்லாமல் செல்ல முடியும். பட்டியலின் 103-வது இடத்தில் ஆப்கானிஸ்தான், 100-வது இடத்தில் பாகிஸ்தான் ஆகிய நாடுகள் உள்ளன.