பிரதமர் மோடிக்கும், அம்பேத்கருக்கும் பல விஷயங்களில் ஒற்றுமை இருக்கிறது என்று புத்தகம் ஒன்றின் முன்னுரையில் இசையமைப்பாளர் இளையராஜா எழுதியிருந்தார்.

அவரது இந்தக் கருத்துக்கு எதிராக பலர் ட்விட்டர் உள்ளிட்ட சமூகவலைதளங்களில் கருத்துகளைப் பதிவு செய்து வருகின்றனர். இந்நிலையில், மத்தியஇணை அமைச்சர் எல்.முருகன்தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:

இசையமைப்பாளர் இளையராஜா செய்த குற்றம் என்ன? இந்திய அரசியலமைப்புச் சட்டம்கருத்து சுதந்திரத்தை வெளிப்படுத்த அனைவருக்கும் சுதந்திரம்வழங்கியுள்ளது. அது இசையமைப்பாளர் இளைய ராஜாவுக்கும் பொருந்தும். தலித் மற்றும் இந்திய அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரான மனநிலையை திமுக வெளிப்படுத்துகிறது. இவ்வாறு அந்தப் பதிவில் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.