நார்வே நாட்டின் ஓஸ்லோவில் நடந்த மகளிருக்கான உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீராங்கனை அன்ஷு மாலிக் முதல் முறையாக வெள்ளிப்பதக்கம் வென்று புதிய வரலாறு படைத்துள்ளார்.
உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதிப்போட்டிக்கு இதுவரை எந்த இந்திய வீராங்கனையும் தகுதி பெற்றதில்லை. முதல் முறையாகத் தகுதி பெற்ற மாலிக், அதில் வெள்ளிப்பதக்கமும் வென்று வரலாறு படைத்துள்ளார்.
57 கிலோவுக்கான இறுதிப் போட்டியில் கடந்த 2016-ம் ஆண்டு ஒலிம்பிக் சாம்பியனும் அமெரிக்க வீராங்கனையுமான ஹெலன் லூசி மொரோலியை வீழ்த்தி மாலிக் இந்த முறை வெள்ளி வென்றார். 59 கிலோவுக்கான பிரிவில் இந்திய வீராங்கனை சரிதா மோர் வெண்கலப் பதக்கத்தைக் கைப்பற்றினார்.
19 வயதான அன்ஷு மாலிக் முதல் முறையாக உலக சாம்பியன்ஷிப்பில் பதக்கம் வென்ற இ்ந்திய வீராங்கனை எனும் பெருமையைச் சேர்த்துள்ளார். இதற்கு முன் கடந்த 2010-ம் ஆண்டு இந்திய வீரர் சுஷில் குமார் மட்டுமே இந்தியா சார்பில் உலக சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். வேறு எந்த வீராங்கனையும், வீரரும் இதுவரை சாம்பியன் பட்டம் வெல்லவில்லை.
முதல் சுற்றில் அன்ஷு மாலிக் 1-0 என்ற கணக்கில் அமெரிக்க வீராங்கனை மொரோலியைவிட முன்னிலை பெற்றிருந்தார். அதன்பின் ஹெலன் 2-1 என்ற கணக்கில் முன்னேறி நெருக்கடி கொடுத்தார். ஆனால் முன்னாள் சாம்பியனான ஹெலனின் பிடியில் சிக்கித் தவித்த மாலிக் 4-1 என்ற புள்ளிக்கணக்கில் பின்தங்கினார்.
ஹெலனின் வலிமையான வலதுகை பிடியில் சிக்கி வேதனையில் துடித்தார் மாலிக். அதன்பின் அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டபோது, மாலிக் வலி தாங்க முடியாமல் கண்ணீர் விட்டார்.
இதற்கு முன் அல்கா தோமர் (2006), கீதா போகத் (2012), பபிதா போகத் (2012), பூஜா தண்டா (2018), வினீஷ் போகத் (2019) ஆகியோர் வெண்கலம் வென்றிருந்தாலும், அன்ஷு மாலிக் வெள்ளி வென்றது சிறப்பானதாகும்.
59 கிலோ எடைப் பிரிவில் இந்திய வீராங்கனை சரிதா 8-2 என்ற கணக்கில் ஸ்வீடன் வீராங்கனை சாரா ஜோஹன்னா லின்ட்போர்க்கிடம் தோல்வி அடைந்து வெண்கலம் வென்றார்.
கடந்த 2012-ம் ஆண்டு நடந்த உலக சாம்பியன்ஷிப்பில் போகத் சகோதரிகள் இரு வெண்கலம் வென்றதே சிறப்பானதாக இருந்தது. அதன்பின் 9 ஆண்டுகளுக்குப் பின் இந்த முறை ஒரு வெள்ளி, வெண்கலத்தை இந்திய வீராங்கனைகள் வென்றனர்.