சூர்யா பிறந்த நாளன்று ‘சூர்யா 40’ ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிடப் படக்குழு முடிவு செய்துள்ளது.

பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகும் படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் சூர்யா. இதன் படப்பிடிப்பு கரோனா அச்சுறுத்தலால் பாதிக்கப்பட்டது. தற்போது கரோனா அச்சுறுத்தல் குறையத் தொடங்கியிருப்பதால் காரைக்குடியில் படப்பிடிப்பு தொடங்கப்பட்டுள்ளது. நீண்ட நாட்கள் நடைபெறும் இந்தப் படப்பிடிப்பில் பெரும்பாலான காட்சிகளைப் படமாக்கப் படக்குழு திட்டமிட்டுள்ளது.

இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தை ‘சூர்யா 40’ என அழைத்து வருகிறது படக்குழு. தனது பிறந்த நாளை ஜூலை 23-ம் தேதி கொண்டாடவுள்ளார் சூர்யா. அன்றைய தினத்தில் ‘சூர்யா 40’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரைத் தலைப்புடன் அறிவிக்கப் படக்குழு முடிவு செய்துள்ளது. இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது.

சன் பிக்சர்ஸ் தயாரித்து வரும் இந்தப் படத்தின் இசையமைப்பாளராக இமான் பணிபுரிந்து வருகிறார். இதில் சத்யராஜ், ப்ரியங்கா மோகன், சரண்யா பொன்வண்ணன், தேவதர்ஷினி, இளவரசு, சுப்பு பஞ்சு, திவ்யா துரைசாமி, ஜெயப்பிரகாஷ் உள்ளிட்ட பலர் சூர்யாவுடன் நடித்து வருகிறார்கள்.

#Suriya | #FirstLook | #Pandiraj | #Suriya40 | #SunPictures | #Trending | #Vadivasala