தமிழ்நாடு, மேற்கு வங்கம், கேரளா, மற்றும் அசாம் ஆகிய 4 மாநிலங்களுக்கும், புதுச்சேரி யூனியன் பிரேதேசத்திற்கும் சட்டமன்றத் தேர்தலுக்கான அட்டவணையை தேர்தல் ஆணையம் இன்று (வெள்ளிக்கிழமை) மாலை 4.30 மணிக்கு அறிவிக்க உள்ளது.

தமிழ்நாடு, மேற்கு வங்கம், கேரளா, மற்றும் அசாம் ஆகிய 4 மாநிலங்களுக்கும், புதுச்சேரி யூனியன் பிரேதேசத்திற்கும் சட்டமன்றத் தேர்தலுக்கான அட்டவணையை இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா இன்று (வெள்ளிக்கிழமை) வெளியிட்டுள்ளார். அதன்படி ஏப்ரல் 6ஆம் தேதி தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது

ஏற்கனவே பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் நான்கு மாநிலங்களிலும், ஒரு யூனியன் பிரதேசத்திலும் (புதுச்சேரி) பிரச்சாரம் செய்யத் தொடங்கியுள்ளனர்.