புனேவில் நடந்துவரும் இந்தியாவுக்கு எதிரான முதலாவது பகலிரவு ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் மோர்கன் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளார்.

இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையியான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் பகலிரவு ஆட்டமாக புனேவில் இன்று தொடங்குகிறது. டெஸ்ட் போட்டியை 1-3 என்ற கணக்கிலும், டி20 தொடரை 2-3 என்ற கணக்கிலும் இந்திய அணி வென்ற நிலையில் ஒருநாள் தொடரை எதிர்கொள்கிறது.  

இந்திய அணியில் இந்தப் போட்டிக்கு பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. ஒருநாள் போட்டியில் 6 பந்துவீச்சாளர்களுடன் இந்திய அணி களமிறங்குகிறது. குர்னல் பாண்டியா, ஹர்திக் பாண்டியா சகோதரர்கள் முதல் முறையாக ஒருநாள் போட்டியில் சேர்ந்து களமிறங்குகின்றனர். ரிஷப் பந்த்துக்கு பதிலாக கே.எல்.ராகுல் விக்கெட் கீப்பிங் செய்ய உள்ளார். யஜுவேந்திர சஹலுக்கு பதிலாக குல்தீப் யாதவ் சேர்க்கப்பட்டுள்ளார். பிரசித் கிருஷ்ணா முதல் முறையாக அறிமுகமாகியுள்ளார்.

தமிழக வீரர்கள் வாஷிங்டன் சுந்தர், நடராஜன், சூர்யகுமார் யாதவ் ஆகியோர் சேர்க்கப்படவில்லை.

இங்கிலாந்து அணியில் டாம் கரன், சாம் கரன், சாம் பில்லிங்ஸ் ஆகியோர் வேகப்பந்துவீச்சுக்கும், மொயின் அலி, அதில் ரஷித் ஆகியோரும் சேர்க்கப்பட்டுள்ளனனர்.

இந்திய அணி:
ரோஹித் சர்மா, ஷிகர் தவண், விராட் கோலி (கேப்டன்), ஸ்ரேயாஸ் அய்யர், கே.எல்.ராகுல், ஹர்திக் பாண்டியா, குர்னல் பாண்டியா, ஷர்துல் தாக்கூர், புவனேஷ்வர் குமார், குல்தீப் யாதவ், பிரசித் கிருஷ்ணா.

இங்கிலாந்து அணி:
ஜேஸன் ராய், ஜானி பேர்ஸ்டோ, பென் ஸ்டோக்ஸ், மோர்கன் (கேப்டன்), ஜாஸ் பட்லர், சாம் பில்லிங்ஸ், மொயின் அலி, சாம் கரன், டாம் கரன், அதில் ரஷித், மார்க் உட்.

ஆடுகளம் எப்படி?

ஆடுகளத்தில் நன்றாக புற்கள் படர்ந்து இருப்தால், பேட்டிங்கிற்கு அருமையானதாக இருக்கும். பந்து பேட்ஸ்மேனை நோக்கி நன்றாக எழும்பி வரும். கடந்த இரு நாட்களாக புனேவில் மழை பெய்துள்ளது. ஆதலால், காற்று மட்டுமே வீசுகிறது. இரவு நேரத்தில் பனிப்பொழிவுக்கு வாய்ப்பு குறைவாகும். இதனால், 2-வது பந்துவீசும் அணிக்கு பந்து நன்றாக ஸ்விங் ஆகும். பந்துவீசுவதிலும் சிரமம் இருக்காது. இரு அணிகளும் இந்த ஆடுகளத்தில் நன்றாக ஸ்கோர் செய்ய முடியும்.