இந்திய வீரர் க்ருணால் பாண்ட்யாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து இன்று நடைபெறுவதாக இருந்த இந்தியா- இலங்கை இடையேயான இரண்டாவது டி20 போட்டி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

இலங்கை சென்றுள்ள இந்திய கிரிக்கெட்டின் இளம்படை  மூன்று ஒருநாள், மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இப்போட்டிகள் அனைத்தும் கொழும்புவில் நடைபெற்று வருகிறது. ஒருநாள் தொடரை 2-3 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றியது.

இதைதொடர்ந்து, நடைபெற்ற முதல் டி20 போட்டியில் இந்திய அணி 38 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் 1-0 என்ற கணக்கில் இந்தியா முன்னிலை வகிக்கிறது.  இந்நிலையில்,  இரு அணிகளுக்கும் இடையேயான 2வது டி20 போட்டி கொழும்பிவின்  பிரேமதாசா மைதானத்தில் இன்று இரவு நடைபெறுவதாக இருந்தது.

இதற்காக வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில், போட்டிக்கு முன்பாக இருநாட்டு வீரர்களுக்கும் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. இதில்,இந்தியாவின் க்ருணால் பாண்ட்யாவுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

அவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்த அவரது சகோதரர் ஹர்திக் பாண்ட்யா மற்றும் சூர்யகுமார் உட்பட 8 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.  இதன் காரணமாக இன்றைய தினம் நடைபெறுவதாக இருந்த 2வது டி20 போட்டி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. நாளைய தினம் இந்த ஆட்டம் நடத்தப்படலாம் என்று கூறப்படுகிறது.