சூர்யாவின் 24 படத்தின் இரண்டாம் பாகம் உருவாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 2016-ம் ஆண்டு விக்ரம் குமார் இயக்கத்தில் சூர்யா நடித்த திரைப்படம் ’24’. இப்படத்தில் மூன்று வேடங்களில் சூர்யாவுடன் நாயகியாக சமந்தா நடித்திருந்தார். இந்தப் படத்தை சூர்யா தனது 2டி எண்டர்டெயின்மென்ட் சார்பாக தயாரித்திருந்தார்.
தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியான இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை பெரும் பக்கபலமாக அமைந்திருந்தது. டைம் டிராவல் முறையில் உருவான இந்தப் படம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்தும் தரப்பினரையும் கவர்ந்தது.
இந்நிலையில், இப்படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்க இருப்பதாக படத்தின் இயக்குநர் விக்ரம் குமார் அண்மையில் பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தார். இதனையடுத்து சூர்யா ரசிகர்கள் இப்பொழுதே சமூக வலைதளங்களில் ஹேஷ்டேக் உருவாக்கி கொண்டாடி வருகின்றனர்.