சென்னை மாநகராட்சி சார்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு:

அரசின் வழிகாட்டு நெறிமுறைகளின்படி, திருமணம் உள்ளிட்ட சுபநிகழ்ச்சிகளில் 50 பேர் மட்டுமே கலந்துகொள்ள வேண்டும். ஓட்டல்கள், திருமண மண்டபங்கள், விருந்து அரங்கங்கள், சமூக நலக்கூடங்கள் ஆகியவற்றில் பதிவு செய்யப்படும் திருமணம் உள்ளிட்ட சுபநிகழ்ச்சிகள் குறித்த விவரங்களை மாநகராட்சிக்கு http://covid19.chennaicorporation.gov.in/covid/marriagehall/ என்ற இணையதள இணைப்பு வாயிலாக தெரியப்படுத்த வேண்டும்.

உணவகங்களில் 50 சதவீதஇருக்கைகளுடன் வாடிக்கையாளர்களை அனுமதிக்க வேண்டும். மேலும், முகக்கவசம் அணிதல்,சமூக இடைவெளியைப் பின்பற்றுதல், கைகளை சுத்தம் செய்தல் போன்றவற்றை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்.

திருமணம் உள்ளிட்ட சுபநிகழ்ச்சிகள் நடைபெறும்போது முகக்கவசம் அணியாதவர்களுக்கு ரூ.200 அபராதம் விதிக்கப்படும். நிகழ்ச்சியில் 50 பேருக்கு மேல் கலந்து கொண்டால், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மற்றும் மண்டப உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்படும். அதேபோல, 50சதவீத இருக்கைகளுக்கு மேல் அனுமதிக்கப்பட்டால் உணவக உரிமையாளர்களுக்கும் அபராதம் விதிக்கப்படும். கரோனா பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றாத உணவகங்கள், திருமண மண்டபங்கள், விருந்து அரங்கங்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here