சென்னை: தற்காலிக ஆசிரியர் நியமனத்தில் எவ்வித சர்ச்சையும் கிடையாது என்று அன்பில் மகேஷ் பேட்டியளித்துள்ளார். பள்ளிகளில் சாதி மத கூட்டங்களுக்கு அனுமதி கிடையாது என்றும் மாணவர்களின் கல்வி பாதிக்க கூடாது என்பதற்காகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார். நிரந்தர ஆசிரியர்களை நியமிப்பதற்கான பணிகளும் நடைபெற்று வருகிறது. முதல்வரின் அறிவுறைப்படியே தற்காலிக ஆசிரியர் நியமனம் நடைபெற்று வருகிறது. கூட்டங்கள் தொடர்பாக அலுவலர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்