சென்னை 2 பெண்கள் உள்பட 5 பேரிடம் அடுத்தடுத்து செல்போன் பறிக்கப்பட்டுள்ளது. சென்னை, அசோக் நகர் அடுத்த புதூர் பகுதியை சேர்ந்தவர் பிரசாந்த். இவர் கே.கே நகர் ராஜமன்னார் சாலை வழியாக நேற்று காலை நடந்து சென்றார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் திடீரென பிரசாந்தின் செல்போனை பறித்து தப்பினர்.

ஆந்திரா மாநிலத்தை சேர்ந்தவர் ராமலிங்க சாஸ்திரி. வாஸ்து நிபுணர். இவர் கே.கே நகரில் 80 அடி சாலை வழியாக பேருந்து நிறுத்தம் நோக்கி நடந்து சென்றார். அப்போது அவரை வழிமறித்த கும்பல் அவரது செல்போனையும் பறித்து தப்பியது. இதேபோல், மேற்கு மாம்பலத்தில் லேப் டெக்னீஷியனான நளினி உள்பட 2 பெண்கள்உள்பட 5 பேரிடம் அடுத்தடுத்து செல்போன் பறிக்கப்பட்டுள்ளது. இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணிந்தவாறு வந்த இருவர் காலை 8.45 முதல் 9.30 மணிக்குள் 5 பேரிடம் அடுத்தடுத்து வழிப்பறி செய்து தப்பியுள்ளனர்.