“இடைவிடாத வெற்றி தொடர் ஓட்டத்தை சாத்தியப்படுத்தும் அனைவருக்கும் நன்றி” என இசையமைப்பாளரும் நடிகருமான ஜி.வி.பிரகாஷ் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “உங்கள் தோழனாக, பொறுப்புள்ள மனிதனாக, திரை கலைஞனாக நான் எப்போதும் என் கடமையை சரியாக செய்து வருவதாகவே வார்த்தைகளால் விவரிக்க முடியாத உங்கள் ஒவ்வொருவரின் பேரன்பையும் பிறந்த நாள் வாழ்த்துகளாக பெறுவதன் மூலம் உணர்கிறேன். இடைவிடாத வெற்றி தொடர் ஓட்டத்தை சாத்தியப்படுத்தும் அனைவருக்கும் நன்றி” என தனது பிறந்தாளை முன்னிட்டு நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.

ஜி.வி.பிரகாஷ் தற்போது, ‘கேப்டன் மில்லர்’, ‘தங்கலான்’, ‘ஜப்பான்’, ‘சைரன்’, ‘எஸ்கே21’, ‘கருமேகங்கள் கலைகின்றன’ உள்ளிட்ட பல்வேறு படங்களுக்கு இசையமைத்து வருவது குறிப்பிடத்தக்கது. மேலும் நடிகராக ‘டீயர்’, ‘அடியே’ உள்ளிட்ட படங்களிலும் நடித்து வருகிறார்