ஹஜ் புனிதப் பயணப் புறப்பாட்டு இடமாகச் சென்னை பரிசீலிக்கப்படுமென உறுதி அளித்த மத்திய அமைச்சருக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் தனது ட்விட்டர் பதிவில் அவர் கூறியுள்ளதாவது: ”2023-இல் இருந்து ஹஜ் புனிதப் பயணப் புறப்பாட்டு இடமாகச் சென்னை பரிசீலிக்கப்படும் என்று உறுதி அளித்துள்ளமைக்காக மத்திய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்விக்கு நன்றி. இனி வரும் காலங்களில், எந்தச் சூழ்நிலையிலும் ஹஜ் புனிதப் பயணப் புறப்பாட்டு இடமாகச் சென்னை இருப்பதை உறுதி செய்யுமாறு மத்திய அமைச்சரைக் கேட்டுக்கொள்கிறேன்.”