ஆண்ட்ரியா நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார் நடன இயக்குநர் பாபி ஆண்டனி.
பல்வேறு பாடல்களுக்கு நடனம் அமைத்து பிரபலமானவர் பாபி ஆண்டனி. தற்போது இயக்குநராக அறிமுகமாகவுள்ளார். இவர் இயக்கவுள்ள படத்தை ஹோம் மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்நிறுவனம் தயாரிப்பில் உருவாகும் 3-வது படம் இதுவாகும்.
இதில் ஆண்ட்ரியா முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். அவருடன் ஆஷா சரத், காளி வெங்கட், சந்தோஷ் பிரதாப், ஷா ரா, வினோதினி, பால சரவணன் உள்ளிட்ட பலர் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். இதன் படப்பிடிப்பு சென்னையில் பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது.
இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவாளராக அகில் ஜார்ஜ், இசையமைப்பாளராக ரான் ஈதன் யோஹன், எடிட்டராக சரத்குமார் ஆகியோர் பணிபுரியவுள்ளனர்.