கரோனா நிவாரண நிதி பெற விண்ணப்பிப்பதற்கான கால அவகாசத்தை நீட்டிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.50,000 நிதியுதவி வழங்கப்படுகிறது. கரோனா உயிரிழப்பு ஏற்பட்ட 4 வாரங்களுக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று மத்திய அரசு வெளியிட்ட அரசாணையில் தெரிவிக்கப்பட் டுள்ளது.
இதை எதிர்த்து மூத்த வழக் கறிஞர் கவுரவ் குமார் பன்சால் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அதில் கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது. இந்த வழக்கு நீதிபதிகள் எம்.ஆர். ஷா, பி.வி.நாகரத்னா அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள் கூறியதாவது: கரோனா உயிரிழப்பு ஏற்பட் 4 வாரங்களுக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்பது ஏற்புடையதாக இல்லை. 4 வாரங்கள் என்பது போதுமான காலஅவகாசமாக இல்லை. உறவினரை இழந்த வர்கள் அந்த சோகத்தில் இருந்து மீள கால அவகாசம் தேவை. எனவே கரோனா நிவாரண நிதிக்கு விண்ணப்பிப்பதற்கான அவகாசத்தை 60 நாட்களாக அதிகரிக்க வேண்டும். போலி ஆவணங்களை அளித்து நிவாரண நிதி பெறுவதை தடுக்க நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
இவ்வாறு நீதிபதிகள் உத்தர விட்டனர்.