நீட் தேர்வை ஒத்திவைக்க  கோரிய மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. எனவே, திட்டமிட்டப்படி வரும் 17ம் தேதி நாடு முழுவதும் நீட் தகுதித் தேர்வு நடைபெற உள்ளது.

முன்னதாக,  2020 ஆண்டிற்கான நீட் தகுதித் தேர்வு அறிவிப்பை தேசிய தேர்வு முகமை  தேசிய தேர்வு முகமையால் கடைசியாக கடந்த மே 11  அன்று வெளியிடப்பட்டது. அதில், தேர்வு  நாள் ஜூன் 17 நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

இருப்பினும், நீட், கியூட், நெட், ஜேஇஇ  போன்ற தகுதித் தேர்வுகள் அடுத்தடுத்து நடைபெற இருப்பதால் நீட் தகுதித் தேர்வை ஒத்திவைக்க வேண்டும் என்று பெற்றோர் மற்றும் மாணவர்கள் கோரிக்கை வைத்தனர். உதாரணமாக, நெட் தேர்வு 9,11, 12 ஆகிய தேதகளிலும் , நீட் தேர்வு வரும் 17ம் தேதியும், கியூட் தேர்வு நாளை முதலும் தொடங்க  இருக்கின்றன.

இந்நிலையில், டெல்லி உயர்நீதிமன்றத்தில் பெற்றோர் மற்றும் மாணவர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், “நாட்டின் பல்வேறு பகுதிகள் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. 218 பேர் வெள்ளத்தில் பலியாகியுள்ளனர்.  மேலும், மத்திய பல்கலைக்கழகங்களுக்கான பொது நுழைவுத் தேர்வு (CUET 2022) மற்றும் நீட் என இரண்டிலும் 6 லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.

ஜேஇஇ தேர்வைப் பொறுத்த வரையில்   8 லட்சம் மாணவர்கள் என்று மதிப்பிடப்படுகிறது. இந்த தேர்வுகள் அடுத்தடுத்து வர இருக்குகின்றன.  மேலும், ஜூன் மாதத்தில் 12ம் வகுப்பு வாரியத் தேர்வுகள் முடிவுற்ற நிலையில், அடுத்த மாதமே நீட் தேர்வை எதிர்கொள்வது மிகக் கடினமாகும். இது, மாணவர்களின் சம வாய்ப்பை கெடுக்கும்.

2021 நீட் தேர்வு நுழைவுத் தேர்வுக்கான கலந்தாய்வு கடந்த மார்ச் மாதம் நிறைவடைந்தது. இந்த,பொது கலந்தாய்வில் நிரப்பப்படாத 323 மருத்துவ இடங்களுக்கான சிறப்பு கவுன்சிலிங் (Stray Vacancy Round Counselling) ஏப்ரல் 23ம் தேதியுடன் நிறைவடைந்ததது. எனவே, இரண்டு காலந்தாய்விலும் வாய்ப்பு கிடைக்காத மாணவர்கள் மிகவும் குறுகிய காலத்தில் 2022 நீட் தேர்வுக்கு தயார் செய்வது கடினமாகும்.

எனவே, மாணவர்களின் மன உளைச்சலை குறைக்கும் 2022 ஆண்டுக்கான நீட் தகுதித் தேர்வை  4 முதல் 6 வார காலத்திற்கு ஒத்திவைக்க வேண்டும்” என்று முறையிட்டனர். ஆனால், அனைத்து தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி, நீட் தேர்வை தள்ளி வைக்க கோரும் மனுவை தள்ளி வைப்பதாக அறிவித்தார்.