கொரோனா காலத்திற்கு பின் நிர்வாக காரணங்களால் சில நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை பணியை விட்டு விடுவித்தனர். பல நிறுவனங்கள் தங்கள் பணியை குறைத்துள்ளது. மைக்ரோசாப்ட்,டெஸ்லா, மெட்டா (ஃபேஸ்புக்) நிறுவனங்கள் பணியாளர் எண்ணிக்கையை குறைந்து வரும் சூழலில் தற்போது கூகுள் நிறுவனமும் இந்த நடவடிக்கையை கையில் எடுத்துள்ளது.
பொருளாதார மந்தநிலை காரணமாக இந்த ஆண்டின் பிற்பகுதியில் ஆட்சேர்பை குறைப்பது என கூகுள் நிறுவனம் முடிவு செய்துள்ளது.
கூகுள் நிறுவனம் இரண்டாம் காலாண்டில் வணிகம், மார்க்கெட்டிங், முக்கிய லாபம் ஈட்டும் பணிகளுக்கு 10,000 பணியாளர்களை புதிதாக தனது பட்டியலில் சேர்த்தது, மேலும் “வலுவான எண்ணிக்கையிலான” நபர்களை மூன்றாம் காலாண்டில் பருவகால கல்லூரி மாணவர்களின் ஆட்சேர்ப்பு நடைபெறும் என்றும் உறுதியளித்துள்ளது.
இந்த ஆண்டு இதுவரை எட்டப்பட்ட பணியமர்த்தல் முன்னேற்றத்தின் காரணமாக, மூன்றாம் மற்றும் நான்காம் காலாண்டில் எடுக்கப்படும் ஆட்களின் எண்ணிக்கை குறையும் என்று ஆல்பாபெட் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை நிறுவன உள் குறிப்பு (internal) மின்னஞ்சல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
சுந்தர் பிச்சையின் செய்தி குறிப்பில் பணிநீக்கங்கள் பற்றிக் குறிப்பிடப்படவில்லை, ஆனால் “ஒழுங்குபடுத்துதல்” மற்றும் “ஒருங்கிணைத்தல்” போன்ற சொற்றொடர்கள் முக்கியத்துவம் பெற்றுள்ளன.
இந்த அறிவிப்பு, 2023ல் “பொறியியல், தொழில்நுட்பம் மற்றும் பிற முக்கியப் பாத்திரங்களை” நிரப்புவதில் கவனம் செலுத்துவதாகவும் ஆல்பாபெட் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை குறிப்பிட்டுள்ளார்.