சென்னை: தமிழ் புத்தாண்டையொட்டி ஆளுநர் ஆர்.என்.ரவி அளிக்கவிருக்கும் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்துள்ளது. நீட் விலக்கு மசோதா தாமதம், துணைவேந்தர் நியமனம் உள்ளிட்ட காரணங்களை சுட்டிக்காட்டி புறக்கணிப்பதாக சிபிஎம் அறிவித்தது. அரசுக்கு மேலானதொரு அதிகார மையமாக செயல்படும் நோக்கில் ஆளுநர் தரப்பு உள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.