விவசாயத்தையும், விவசாயிகளையும் காப்பாற்ற இந்த நாட்டின் விவசாயிகள் தங்கள் உயிரை எப்படிப் பணயம் வைத்திருக்கிறார்கள் என்பதை வரும் தலைமுறைகள் நினைவில் வைத்திருக்கும்

விவசாயத்தையும், விவசாயிகளையும் காப்பாற்ற இந்த நாட்டின் விவசாயிகள் தங்கள் உயிரை எப்படிப் பணயம் வைத்திருக்கிறார்கள் என அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.

மூன்று வேளாண் சீர்திருத்த சட்டங்களையும் திரும்பப் பெற முடிவு செய்யபட்டிருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். அத்துடன் போராட்டம் நடத்தும் விவசாயிகள் போராட்டத்தைக் கைவிட்டு வீடு திரும்ப வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.விவசாயிகளின் நலனுக்காகவே மூன்று வேளாண் சட்டங்களையும் கொண்டுவந்தோம். ஆனால், அவர்களை சமாதானப்படுத்த முடியவில்லை என்பது வருத்தம் அளிப்பதாகவும் எனவே மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்ப பெறுகிறோம் எனவும் பிரதமர் மோடி கூறியுள்ளார்.

இதுகுறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ள டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், “ இந்த நாளில் எவ்வளவு பெரிய செய்தி வந்திருக்கிறது. மூன்று வேளாண் சட்டங்களும் ரத்து செய்யப்பட்டன. இந்தப்போராட்டத்தில் 700க்கும் மேற்பட்ட விவசாயிகள் வீரமரணம் அடைந்தனர். அவர்களது தியாகம் அழியாது இருக்கும். விவசாயத்தையும், விவசாயிகளையும் காப்பாற்ற இந்த நாட்டின் விவசாயிகள் தங்கள் உயிரை எப்படிப் பணயம் வைத்திருக்கிறார்கள் என்பதை வரும் தலைமுறைகள் நினைவில் வைத்திருக்கும். என் நாட்டு விவசாயிகளுக்கு நான் தலைவணங்குகிறேன்” எனப் பதிவிட்டுள்ளார்.