சென்னை: தமிழகத்தில் கடந்த 28 மாதங்களில் 925 கோயில்களில் இந்துசமய அறநிலையத் துறை சார்பில் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டுள்ளது.

இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் திருப்பணிகள், அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த வகையில், பக்தர்கள் அதிக அளவில் வருகை தரும் 15 முக்கியமான கோயில்களில் ரூ.1,430 கோடி மதிப்பீட்டில் திருப்பணிகள் நடந்து வருகின்றன.

கும்பாபிஷேகம் நடைபெறாத கோயில்களில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தப்படுகிறது. அந்த வகையில், தமிழகத்தில் கடந்த 28 மாதங்களில் அதாவது 2021 மே மாதம் முதல் மொத்தம் 925 கோயில்களில் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டுள்ளதாக இந்து சமய அறநிலைய துறை தெரிவித்துள்ளது.