அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் சோதனை நடத்ததிட்டமிட்ட தகவல் முன்கூட்டியே வேலுமணி தரப்பினருக்கு தெரிந்ததா என்பது குறித்து துறை ரீதியாக விசாரணை நடத்தப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
எஸ்.பி.வேலுமணியின் வீடு உள்ளிட்ட 60 இடங்களில்லஞ்ச ஒழிப்பு போலீஸார் நேற்று முன்தினம் சோதனைநடத்தினர். கோவையில் வேலுமணி வீட்டில்சோதனை தொடங்கிய சிறிது நேரத்திலேயே அவரது ஆதரவாளர்கள் அதிக அளவில் வீட்டு முன்பு குவிந்துவிட்டனர்.
குறிப்பாக, பெண்கள் அதிகம் குவிந்திருந்தனர். போராட்டங்களுக்கு முன்கூட்டியே தயாராகி வந்து அமர்வதுபோல வந்து குறிப்பிட்ட இடத்தில் அமர்ந்தனர். அவர்களுக்கு காலை, மதியம் என இரண்டு வேளை உணவும் இடையிடையே ரோஸ் மில்க், டீ உள்ளிட்டவற்றையும் தடையின்றி விநியோகம் செய்யப் பட்டது.
எனவே, வேலுமணி வீட்டில் சோதனை நடத்தப்போவதை முன்கூட்டியே தெரிந்துகொண்டு, ஆர்ப்பாட்டம் நடத்துவதற்காக ஆட்களை அழைத்து வந்ததுடன் அவர்களுக்கு உணவு உள்ளிட்டவை வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டதா என போலீஸாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதேபோன்று, சென்னை எம்ஆர்சி நகரில் உள்ள தனது சகோதரரின் வீட்டிலேயே எப்போதும் தங்கியிருக்கும் வேலுமணி, ஞாயிற்றுக்கிழமை இரவே அங்கிருந்து புறப்பட்டு சேப்பாக்கம் எம்எல்ஏக்கள் விடுதியில் வந்து தங்கியதும் சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. லஞ்ச ஒழிப்பு துறையின்சோதனையை முன்கூட்டியே அறிந்து தகுந்த முன்னேற்பாட்டுடன் எஸ்.பி.வேலுமணி தரப்பினர் இருந்ததாக கூறப்படுகிறது.
சோதனை நடக்கப்போ வதை தெரிந்துகொண்டு, பணம் மற்றும் ஆவணங்கள்மறைத்து வைக்கப்பட்டிருக் கக் கூடும். இதனால்தான் 60இடங்களில் சோதனை நடத்தியும் முக்கிய ஆவணங்கள் கிடைக்கவில்லை என்று லஞ்ச ஒழிப்பு போலீஸார் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை நடத்தவிருக்கும் தகவலை முன்கூட்டியே வேலுமணி தரப் பினருக்கு கசியவிட்டது யார் என்பது குறித்து துறை ரீதியான விசாரணை நடந்து வருவதாக கூறப்படுகிறது.