இந்தியாவில் இயங்கி வரும் இ-காமர்ஸ் நிறுவனங்கள் பல்வேறு சலுகைகளை ஐபோன்களுக்கு வழங்கி வருகின்றன. இந்நிலையில், ஐபோன் 12 உட்பட பல்வேறு போன்களுக்கு சலுகைகளை அறிவித்துள்ளது ஐ-ஸ்டோர்.

இது தொடர்பான அறிவிப்பு இந்தியாவுக்கான ஆப்பிள் விநியோகஸ்தர்களின் அதிகாரபூர்வ வலைதளத்தில் வெளிவந்துள்ளது. ஐபோன் 12 ஸ்டோரில் ரூ.38,900-க்கு சலுகை விலையில் கிடைக்கும் என சொல்லப்பட்டுள்ளது. அதாவது, வங்கித் தள்ளுபடி மற்றும் எக்ஸ்சேஞ்ச் (பழசுக்கு புதுசு) ஆஃபரில் இந்த விலை தள்ளுபடி கிடைப்பதாக சொல்லப்பட்டுள்ளது.

இந்தியாவில் 64ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட ஐபோன் 12-இன் விலை ரூ.56,900-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல 128ஜிபி ஸ்டோரேஜ் ரூ.61,900-க்கும், மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ் வசதி கொண்ட போன் ரூ.71,900-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தற்போது அந்த விலையில்தான் சலுகை அறிவித்துள்ளது ஆப்பிள்.

அதாவது, ஐபோன் 12 – 64ஜிபி ஸ்டோரேஜ் ரூ.38,900-க்கும், 128ஜிபி ரூ.43,900-க்கும், 256ஜிபி ரூ.53,900-க்கும் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருந்தாலும் சலுகை விலையில் இதனைப் பெற விரும்புபவர்கள் தங்களிடம் உள்ள பழைய ஐபோன்களை எக்ஸ்சேஞ்ச் செய்ய வேண்டியுள்ளது. எக்ஸ்சேஞ்ச் கொடுக்கப்படும் போனின் நிலையை கொண்டே எவ்வளவு சலுகை கிடைக்கும் என்பது சொல்லப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐபோன் எக்ஸ்.ஆர் 64ஜிபி போன் எக்ஸ்சேஞ்ச் செய்பவர்களுக்கு மேற்கூறிய தள்ளுபடி உறுதியாக கிடைக்கும் எனத் தெரிகிறது. ஏர்பாட், ஐபாட் ஏர் உட்பட பல்வேறு ஆப்பிள் தயாரிப்புகள் சலுகை விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.