ஷார்ஜாவில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் 2021-ன் 54வது போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆக்ரோஷமாக ஆடி ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 86 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதையடுத்து பிளே ஆப் சுற்றுக்கு ஏறக்குறைய தகுதி பெற்று விட்டது. மும்பை தகுதி பெற வேண்டுமெனில் பிரம்மப்பிரயத்தனம் செய்ய வேண்டும்.

ஷார்ஜாவில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் 2021-ன் 54வது போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆக்ரோஷமாக ஆடி ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 86 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதையடுத்து பிளே ஆப் சுற்றுக்கு ஏறக்குறைய தகுதி பெற்று விட்டது. மும்பை தகுதி பெற வேண்டுமெனில் பிரம்மப்பிரயத்தனம் செய்ய வேண்டும்.

இந்த வெற்றியின் மூலம் கொல்கத்தா அணி 14 புள்ளிகளுடன் டெல்லி, சிஎஸ்கே பெங்களூருவைக் காட்டிலும் ரன் ரேட்டில் 0.587 என்று டாப்பில் உள்ளது. மும்பை இந்தியன்ஸ் இன்று சன் ரைசர்ஸ் ஹைதராபாத்துடன் மோதுகிறது, இதில் மும்பை தோற்காமல் இருக்க வேண்டும் என்பதே பெரிய காரியம் எனும் நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணியின் தற்போதைய ரன் ரேட் மைனஸ் 0.048. சன் ரைசர்ஸை வெற்றி பெறுவது மட்டும் போதாது, அந்த அணியை 171 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தினால் மட்டுமே கொல்கத்தா நெட் ரன் ரேட்டை தாண்ட முடியும். இது சாத்தியமா?

மும்பை 200 ரன்கள் அல்லது அதற்கு மேல் ரன்களைக் குவித்து 171 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும். சரி சேசிங் என்றால் மும்பை என்ன செய்ய வேண்டுமெனில் ஏறக்குறைய அசாத்தியமே. எனவே முதலில் பேட் செய்து 230-240 ரன்களை அடித்து சன் ரைசர்ஸ் அணியை 171 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்த வேண்டும், எனவே 2021 ஐபிஎல் தொடரில் மும்பை கதை முடிந்தது என்றே கூறி விடலாம்.

சிஎஸ்கே அணி நேற்று பஞ்சாபிடம் வாங்கிய சரியான உதையின் மூலம் 18 புள்ளிகளுடன் முடிந்தது. 2ம் இடத்தில் உள்ளது, முதலிடக் கனவு தகர்ந்தது, 20 புள்ளிகளுடன் டெல்லி முதலிடம் வகிக்கிறது. சன் ரைசர்ஸ் அணிக்கு எதிராக பெங்களூரு வென்றிருந்தால் 18 புள்ளிகள் பெற்றிருக்கலாம், ஆனால் தோற்றதால் 16 புள்ளிகளையே பெற்றுள்ளது. ஆர்சிபி நிகர ரன் விகிதம் மைனஸில் உள்ளது.

எனவே கோலி படையான ஆர்சிபி டாப் 2 இடங்களில் பினிஷ் செய்ய வேண்டுமெனில் டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் டெல்லியை ஆர்சிபி அணி 113 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும், இது நடக்குமா சாத்தியமில்லை. ஆர்சிபி சேசிங் செய்கிறது என்றால் இலக்கு 142 ரன்கள் என்றால் ஆர்சிபி அணி 16 ஓவர்களில் அந்த ஸ்கோரை எடுக்க வேண்டும். இது ஓரளவுக்கு சாத்தியம் போல் தெரிகிறது.

எனவே முதல் பிளே ஆஃப் சுற்றில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி சிஎஸ்கேவை எதிர்த்து ஆடும் என்றே தெரிகிறது.