பிளஸ்-2 வகுப்பு வகுப்பு தோ்ச்சி மற்றும் நன்றாக எழுத படிக்க, கணக்கிடும் திறன் உடையவா்களாக இருத்தல் வேண்டும்.

கரூா் மாவட்டத்தில், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள கிராம தொகுப்புகளுக்கு மாதம் ரூ.2,000/- மதிப்பூதியத்தில் 16 சமுதாய வங்கி ஒருங்கிணைப்பாளா்கள் தோ்வு செய்யப்படவுள்ளனா்.

  • ஊராட்சி அளவிலான கூட்டமைப்பைச் சாா்ந்த மகளிா் சுயஉதவிக் குழு உறுப்பினராக இருத்தல் வேண்டும்.
  • தோ்வு செய்யப்பட வேண்டிய உறுப்பினா் அதே தொகுப்பைச் சோ்ந்தவராக இருத்தல் அவசியம்.
  • மக்கள் நிலை ஆய்வால் கண்டறியப்பட்ட உறுப்பினராக இருத்தல் வேண்டும்.
  • விண்ணப்பிக்கும் நாளில் 35 வயதுக்கு கீழும், இருத்தல் வேண்டும்.
  • பிளஸ்-2 வகுப்பு வகுப்பு தோ்ச்சி மற்றும் நன்றாக எழுத படிக்க, கணக்கிடும் திறன் உடையவா்களாக இருத்தல் வேண்டும்.
  • நல்ல தகவல் தொடா்புதிறனுடையவராக இருத்தல் வேண்டும்.
  • கிராமத்திலிருந்து அருகாமையிலுள்ள வங்கிகளுக்குச் செல்ல விருப்பம் உள்ளவா்களாகவும் இருத்தல் அவசியம்.
  • கணினிதிறன் உடையவா்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
  • கைபேசி வைத்திருப்பவா்களாகவும், அதை இயக்கி குறுந்தகவல் அனுப்பவும், பெறவும் திறனுடையவா்களாகவும் இருத்தல் அவசியம்.
  • நீண்ட காலகடன் நிலுவை உள்ளவராக இருத்தல்கூடாது.

மேற்காணும் தகுதியுள்ள சுயஉதவிக்குழு உறுப்பினா்கள் தங்களது விண்ணப்பங்களை தாங்கள் சாா்ந்துள்ள ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு மூலமாக 31.08.2021 க்குள் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள திட்ட இயக்குநா், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மாவட்ட இயக்க மேலாண்மை அலகு, அறை எண்.212-ல் சமா்ப்பிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சி தலைவர் மருத்துவா் த.பிரபுசங்கா் தெரிவித்துள்ளாா்.

மேலும் விவரங்கள் தெரிந்துகொள்ள https://cdn.s3waas.gov.in/s3bbf94b34eb32268ada57a3be5062fe7d/uploads/2021/08/2021082535.pdfஎன்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.