மதுரை விமான நிலையத்தில் இருந்து அக்டோபர் 1-ம் தேதி முதல் துபாய்க்கு மீண்டும் விமான சேவை தொடங்க திட்டமிடப்பட் டுள்ளது.

மதுரை விமானநிலையத்தில் இருந்து உள்நாட்டு நகரங்களுக்கு மட்டுமில்லாது இலங்கை, சிங் கப்பூர், மற்றும் துபாய் போன்ற வெளிநாடுகளுக்கும் விமானங்கள் இயக்கப்பட்டு வந்தன.

கரோனா தொற்றால் சிங்கப்பூர், துபாய்க்கு இயக்கப்பட்ட விமா னங்கள் ரத்து செய்யப்பட்டன. கொழும்புவுக்கு வாரத்தில் திங் கட்கிழமை மட்டும் விமானம் இயக்கப்பட்டு வருகிறது. தற்போது தமிழகத்தில் கரோனா தொற்று ஓரளவு கட்டுப்படுத்தப்பட்டதால் சென்னை, திருச்சியில் இருந்து துபாய்க்கு விமானங்கள் இயக்கப் படுகின்றன.

அதனைத் தொடர்ந்து அக்டோபர் 1-ம் தேதி முதல் மதுரை விமான நிலையத்தில் இருந்தும் துபாய்க்கு ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் விமானங்களை இயக்க முடிவு செய்துள்ளது. அக்.1முதல் வாரத்துக்கு 3 நாட்கள் மதுரை- துபாய்- மதுரை வழித்தடத்தில் விமான சேவை தொடங்கப்பட உள்ளது.

துபாய்க்கு விமானங்களை இயக்க உலக சுகாதார நிறுவனம் அறிவுறுத்திய தடுப்பூசி 2 டோஸ்கள் போட்டிருப்பதோடு, ஆர்டிபிசிஆர் பரிசோதனை எடுத் திருக்க வேண்டும். மேலும், விமான பயணத்துக்கு 4 மணி நேரத்துக்கு முன் ரேபிட் பரி சோதனையும் எடுத்திருக்க வேண்டும்.

அதனால், துபாய் செல்லும் பயணிகள் 6 மணி நேரத்துக்கு முன்பே விமான நிலையம் வர வேண்டி உள்ளது.

சென்னை, திருச்சி விமான நிலையத்திலும் இதே நடைமுறை தான் கடைப்பிடிக்கப்படுகிறது.

மதுரை விமான நிலையத்தில் இந்த நடைமுறையைக் கடைப் பிடித்தால்தான் மதுரையில் இருந்து துபாய்க்கு விமானம் இயக்க துபாய் அரசு அனுமதி அளிக்கும். அதற்கான ஏற்பாடுகளை விமான நிலைய நிர்வாகிகள் மேற் கொண்டு வருகின்றனர்.