புதுடெல்லி: ஐஆர்சிடிசி இணையதளம் அல்லது செயலி மூலமாக டிக்கெட் முன்பதிவு செய்யும் எண்ணிக்கையை இந்திய ரயில்வே உயர்த்தியுள்ளது.
இதுகுறித்து இந்திய ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, இனி ஐஆர்சிடிசி இணையதளம் மற்றும் செயலி மூலமாக ஆதார் எண்ணை இணைக்காமல், பயனர் அடையாளத்தை பயன்படுத்தி, ஒரு மாதத்தில் அதிகபட்சமாக 12 பயணச்சீட்டுகளையும், ஆதார் எண்ணுடன் பயனர் அடையாளத்தை பயன்படுத்தி, ஒரு மாதத்தில் அதிகபட்சமாக 24 பயணச்சீட்டுகளையும் முன்பதிவு செய்து கொள்ளலாம்.
தற்போது ஐஆர்சிடிசி இணையதளம், செயலி மூலமாக, ஒரு மாதத்துக்கு ஆதார் எண் இல்லாமல் பயனர் அடையாளத்தை பயன்படுத்தி 6 பயணச்சீட்டுகளையும், ஆதார் எண்ணுடன் பயனர் அடையாளத்தை பயன்படுத்தி 12 பயணச்சீட்டுகள் மட்டுமே முன்பதிவு செய்ய முடியும்.
பயணிகளின் நலனுக்காக இந்த எண்ணிக்கையை இந்தியன் ரயில்வே தற்போது உயர்த்தியுள்ளது.